Amrit Bharat Train Inside Video: அம்ரித் பாரத் அதிவிரைவு இரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் என்னென்ன?.. நேரில் பார்த்து அதிகாரிகளை பாராட்டிய மத்திய அமைச்சர்..!
இரயில்வே துறை புதிய உத்வேகத்தில் தொடர்ந்து பயணிப்பது, எதிர்கால இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நவம்பர் 26, புதுடெல்லி (New Delhi): மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய இரயில்வே புதிய பரிணாமத்தை அடைந்து வருகிறது. தொழில்நுட்பங்கள் வெகுவாக உட்பகுத்தப்பட்டு, பயணிகளின் விரைந்த சேவையை கருத்தில் கொண்டு அதிவிரைவு இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு பின், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் மக்களுக்கான சேவையை தொடங்கவுள்ளது.
அறிமுகமாகும் அமிர்த் பாரத் (Amrit Bharat Train) இரயில்கள்: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான நிகழ்ச்சிகளை மத்திய இரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் இரயில் பெட்டிகளை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் சிறப்பம்சங்களை கேட்டறிந்து அதிகாரிகளையும் பாராட்டினார்.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்: இரயிலில் பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், இரயில் பெட்டிகளில் உள்ள வசதிகள் போன்றவற்றை கண்டு அதிகாரிகளை பாராட்டினார். முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா வரை இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் விரைவில் பெங்களூருவில் உள்ள மால்டா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Soaked Almond: ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
பாதுகாப்பு பயணம்: அதேசமயத்தில், ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புஷ் மற்றும் புல் எனப்படும் நுட்பத்திறன் கொண்ட அம்ரித் பாரத் இரயில் எஞ்சின் ஒன்று முன்னோக்கி இழுக்கும், இன்னொன்று பின்னால் இருந்து தள்ளும் என்பதால் இரயில் அதிவேகத்தில் பயணம் செய்யும். அதே போல வழியில் உள்ள பாதை, திருப்பம், பாலம் போன்றவையும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப தாங்கும் வகையில் சீர்படுத்தப்பட்டுள்ளன.
130 கி.மீ வேகத்தில் அதிவேக பயணம்: இரயில் அதிவேகத்தில் பயணித்தாலும் குறைந்த அதிர்ச்சியை உணரப்படும் வகையில், பிரத்தியேக தொழில்நுட்பம் கொண்டு இரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் இந்த இரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரயிலில் 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள். 12 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 3 சிலீப்பர் பெட்டிகள், இரண்டு காவல் பெட்டிகள் என மொத்தமாக 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சார்ஜிங் பாயிண்ட்கள், தொழில்நுட்ப வசதியுடன் கொண்ட கழிவறை வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அம்ரித் & வந்தே பாரத் இரயில்கள்: சுமார் 1800 பயணிகள் இந்த இரயிலில் பயணம் செய்யலாம். அம்ரித் பாரத் இரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐசிஎப் கோச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் மற்றும் ஐந்து வந்தே பாரத் இரயில்கள் டிசம்பர் 30ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அதன்படி, அயோத்தி முதல் ஆனந்த் விகார், புது டெல்லி முதல் வைஷ்ணவ தேவ் வரை, அமிர்தசரஸ் முதல் புது டெல்லி வரை, ஜல்னா முதல் மும்பை வரை, கோவை முதல் பெங்களூர் இடையே இரயில்கள் இயக்கப்பட உள்ளன.