Badam Almond (Photo Credit: Pixabay)

டிசம்பர் 25, சென்னை (Chennai): நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் பாதாமை, அப்படியே சாப்பிடுவதற்கு பதில் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது பல்வேறு நன்மைகளை வழங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஊறவைத்த பாதாம் என்சைம் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் செரிமானமும் விரைந்து நடக்கிறது.

உயிர்ப்புத்தன்மை கிடைக்க: செரிமானம் விரைந்து நடப்பதால், குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது. அதேபோல, பாதாமை ஊற வைத்து சாப்பிடுவது ஊட்டச்சத்துகளுக்கு உயிர்ப்பு தன்மை கிடைக்க வழிவகை செய்கிறது.

வலுசேர்க்கும் பாதாம்: இதனால் அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலால் உறிஞ்சப்படும். காலை வேளையில் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை வழங்கும். பாதாமில் இருக்கும் புரதச்சத்து, உடலுக்கு வலு சேர்த்து பல்வேறு நன்மைகளை வழங்கும். PayTM Layoff: 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பேடிஎம் நிறுவனம்; ஐடி நிறுவனங்களில் தொடரும் அதிரடி.! 

நீரிழிவு நோய் கட்டுப்பட: இதில் இருக்கும் மோனோசாச்சுரேட் கொழுப்பு, உடலுக்கு கேடுகளை தரும் கொழுப்பின் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

மூளை, சருமத்திற்கு நல்லது: ஊற வைத்த பாதாமில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், அறிவாற்றல் செயல் திறனை மேம்படுத்தி நினைவுகளை வலுப்படுத்தும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் சீராகி, மூளை ஆரோக்கியத்துடன் இருக்கும். வைட்டமின் ஈ சருமத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து பிரகாசிக்கும் தோற்றத்தையும் வழங்கும். இளமை தோற்றத்தை தக்க வைக்க பாதாம் ஊறவைத்து சாப்பிடலாம்.