Apple Smartwatch Saves Life: உயிருக்கு போராடியவருக்காக உயிர்வந்து வேலை செய்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்.. அசத்தல் தகவல் இதோ.!

ஆப்பிள் வாட்ச் கட்டியுள்ள நபரின் உடல்நிலை மோசமாகும் பட்சத்தில், அவர் பதிவு செய்துள்ள தரவுகளின்படி ஆபத்து வேளையில் அவரின் குடும்ப உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ள நபருக்கு எச்சரிக்கை சமிக்கை செல்லும்.

Apple SmartWatch (Photo Credit: Pixabay)

ஜூன் 29, சான் பிரான்சிஸ்கோ (Technology News): ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் சிறந்த தொழில்நுட்ப பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கைக்கடிகாரம் போன்றவை தனியுரிமை, தகவல் பாதுகாப்பு, தரமான அமைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் உலகளவில் விரும்பப்படும் தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதன் விலை பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றாலும், அதன் சிறப்பம்சத்தால் அதனை பலரும் வாங்கி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் மனிதர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உதவுகிறது. இதனை பயனர் தங்களுக்கு என உபயோகம் செய்யும்போது, இதயத்துடிப்பை கண்காணித்தல், இரத்த அழுத்தத்தை கண்காணித்தல் போன்ற பணிகளை ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரம் செய்கிறது.

ஒருவேளை வாட்ச் கட்டியுள்ள நபரின் உடல்நிலை மோசமாகும் பட்சத்தில், அவர் பதிவு செய்துள்ள தரவுகளின்படி ஆபத்து வேளையில் அவரின் குடும்ப உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ள நபருக்கு எச்சரிக்கை சமிக்கை செல்லும். அவசர அழைப்புக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதன் வாயிலாக உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Avadi Murder: மனைவிக்கு கள்ளக்காதலனால் பிறந்த குழந்தை; ஆத்திரத்தில் வீடுபுகுந்து நடந்த வெறிச்செயல்..! 

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிசுகோ நகரில் வசித்து வரும் அலெக்ஸாண்டர் லைஸெர்ஸன் என்பவர், ஏணியில் இருந்து தவறி விழுந்து தனது வீட்டில் காயமடைந்து இருந்துள்ளார். அவருக்கு தலையில் அடிபட்டு சில நிமிடங்கள் சுயநினைவு இல்லை என்பதால், அவரின் ஆப்பிள் வாட்ச் சுயமாக 911 அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளது. அதேபோல, அலெக்ஸாண்டரின் மனைவி செல்போனுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, அவர் விரைந்து வந்து பார்த்தபோது கணவரின் நிலை தெரியவந்தது. இதற்குள்ளாக அவசர உதவியும் கிடைத்ததால், விரைந்து செயல்பட்டு அலெக்ஸாண்டர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக அவர் காப்பாற்றப்பட்டுவிட்ட நிலையில், ஒருவேளை அவரை யாரேனும் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் உயிர் பறிபோகும் சூழல் உருவாகி இருக்கலாம். நல்வாய்ப்பாக அது ஆப்பிள் வாட்ஸால் தவிர்க்கப்பட்டது. அவர் ஆப்பிள் நிறுவனத்தின் சீரிஸ் 8 ஸ்மார்ட் வாட்சை அணிந்திருந்தார்.