Vodafone: 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய காத்திருக்கும் வோடபோன் நிறுவனம்.. திருப்தி இல்லாததால் சிஇஓ முடிவு..!

சர்வதேச அளவில் 104,000 பேரை வைத்து செயல்பட்டு வரும் வோடபோன் நிறுவனம், 11 ஆயிரம் பேரை 3 ஆண்டுகளில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

Vodafone VI (Photo Credit: Facebook)

மே 17, புதுடெல்லி (Technology News): இந்தியாவில் செல்போன் நெட்ஒர்க் தேவையை பூர்த்தி செய்யும் நிறுவனங்களில் முக்கியமானது வோடபோன். பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், 21 நாடுகளில் நேரடியாக தனது நெட்ஒர்க் சேவையை வழங்கி வருகிறது. 47 நாடுகளில் உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்து நெட்ஒர்க் சேவையை வழங்குகிறது.

Voice Data Fone என்பது Vodafone என மருவியது. இந்தியாவில் வோடபோன் நெட்ஒர்க்கை 239 மில்லியன் மக்கள் உபயோகம் செய்து வருகிறார்கள். இந்திய அளவில் மூன்றாவது மிகப்பெரிய நெட்ஒர்க் வழங்கும் நிறுவனமாகவும், சர்வதேச அளவில் முதல் 10வது இடத்திற்குள் நெட்ஒர்க் வழங்கும் நிறுவனமாகவும் இருக்கிறது. Delhi Crime: மனைவி, 6 வயது குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்த கணவர்; 13 வயது மகன் உயிர் ஊசல்.!

இந்த நிலையில், வோடபோன் நிறுவனம் வரும் 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிற பொத்தி நிறுவனங்களை ஒப்பிடுகையில், வோடபோனின் செயல்பாடுகள் திருப்தி இல்லாத நிலையில், அடுத்தகட்டமாக நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்ல இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தலைமை செயல் அதிகாரி வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.