IPL Auction 2025 Live

WhatsApp Update: போட்டோவை தொடர்ந்து வீடியோவையும் எச்டி தரத்தில் அனுப்பலாம் - விரைவில் அறிமுகமாகிறது; வாட்சப் அறிவிப்பு.!

தற்போது அவை விடியோவுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 25, புதுடெல்லி (Technology News): மெட்டா (Meta) நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பேஸ்புக் (Facebook), வாட்சப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), திரெட்ஸ் (Threads) போன்ற செயலிகள் தொடர்ந்து பயனர்களுக்கு பல்வேறு புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது. இவை மக்களால் தொடர்ந்து வரவேற்கப்படும் காரணத்தாலும், மக்களின் பயன்பாட்டை எளிமைப்படுத்தும் பொருட்டு அமைவதாலும் ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது.

வாட்சப் செயலியை (WhatsApp Update) பொறுத்தமட்டில் பயனர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படத்தை அனுப்பும்போது, வாட்சப் தானியங்கு முறையில் செயல்பட்டு போட்டோக்கள் (WhatsApp Photos Sharing HD) தரத்தை குறைத்து அனுப்பும். இந்த குறையை நிர்வதி செய்ய பயனர்கள் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

கடந்த வாரத்தில் வாட்சப் நிறுவனம் புகைப்படங்களை எச்டி தரத்தில் அனுப்பும் வகையில் தனது அமைப்புகளை புதுப்பித்ததாக அறிவித்தது. இது நல்ல வரவேற்பை பெற்றது. பயனர்கள் போட்டோக்களை அனுப்புவதற்கு முன்பு, வாட்சப் திரையில் தோன்றும் எச்டி அமைப்பை தேர்வு செய்தால், அந்த போட்டோ அதே தரத்துடன் பகிரப்படும். எச்டி அமைப்பு தேர்வு செய்யப்படாத பட்சத்தில் சாதாரணமாக அவை அனுப்பி வைக்கப்படும். Girl Friend Killed: கார் நிறுத்தத்தில் தகராறு; 34 வயது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 29 வயது இளைஞர்..! 

WhatsApp (Photo Credit: Pixabay)

இந்நிலையில், தற்போது விரைவில் விடீயோக்களும் எச்டி (WhatsApp Video HD Resolution) தரத்துடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த சேவை சோதனை ரீதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், விரைவில் எச்டி தரத்துடன் வீடியோ அனுப்பும் சேவையும் தொடங்கும்.

தற்போது நாம் அனுப்பும் வீடியோ எந்த பிக்சல் நிலையில் இருந்தாலும், அவை தானியங்காக 480 பிக்சல் என்ற அளவில் கொண்டு வரப்பட்டு அனுப்பி வைக்கப்படும். சோதனை முயற்சி வெற்றியடைந்து, விடியோவும் எச்டி தரத்தில் அனுப்பி வைக்க அனுமதிக்கப்பட்டால், 720 பிக்சலில் இனி அவை பகிரப்படும். விரைவில் இந்நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.