Wipro AI 360: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதுமையை ஏற்படுத்த விப்ரோ முடிவு; 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு.!
30 ஆயிரம் பேரை தேர்வு செய்து 2 இலட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள விப்ரோ, விப்ரோ AI 360 (Wipro AI 360) அமைப்பை விரைவில் நிறுவவுள்ளது.
ஜூலை 12, புதுடெல்லி (Technology News): இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருப்பது விப்ரோ (Wipro). இந்நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 1.89 இலட்சம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். உலகளவில் 50 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.
சர்வதேச அளவில் தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதன் செயல்பாடுகளை அதிகாரி தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியில் விப்ரோ நிறுவனம் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இதற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவுள்ளது. MSD on YogiBabu: சி.எஸ்.கே அணியில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு?. எம்.எஸ் தோனி கலக்கல் பதில்..!
Cloud, Data Analytics பணியாளர்கள் 30 ஆயிரம் பேரை தேர்வு செய்து 2 இலட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள விப்ரோ, விப்ரோ AI 360 (Wipro AI 360) எனப்படும் அமைப்பை உருவாக்கமும் திட்டமிட்டுள்ளது. தற்போதைய AI தொழில்நுட்பம் என்பது நமது பேச்சுக்களை கேட்டு பதில் சொல்கிறது.
விரைவில் அவை தானியங்கு முறையில் எழுதவும், பாடல்களை இசைக்கவும், உருவாக்கவும் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தில் புதுமையை கொண்டு வர விப்ரோ முயற்சித்து அதற்கான முதலீடுகளை மேற்கொள்கிறது.