Iran Coal Mine Explosion: ஈரான் நிலக்கரி சுரங்க வெடிப்பு; 50 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்ததால், 50 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Iran Coal Mine Explosion (Photo Credit: @ghanaguardian1 X)

செப்டம்பர் 23, கொராசன் (World News): ஈரானின் தெற்கு கொராசன் (South Khorasan) மாகாணத்தில் உள்ள நிலக்கரி (Coal) சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் (செப்டம்பர் 22) எரிவாயு வெடித்ததில், சுமார் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். மதன்ஜூ நிறுவனத்தால் (Madanjoo Company) நடத்தப்படும் சுரங்கத்தின் பி மற்றும் சி ஆகிய இரண்டு பகுதியில் மீத்தேன் வாயு வெடித்ததால் (Methane Gas Explosion), இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!

நாட்டின் நிலக்கரியில் 76% இப்பகுதியில் இருந்து வழங்கப்படுகிறது. மதன்ஜூ நிறுவனம் உட்பட சுமார் 8 முதல் 10 பெரிய நிறுவனங்கள் இப்பகுதியில் வேலை செய்கின்றன என்று தெற்கு கொராசன் மாகாணத்தின் ஆளுநர் அலி அக்பர் ரஹிமி (Ali Akbar Rahimi) நேற்று தெரிவித்தார். இதுகுறித்து, அந்நாட்டு அரசாங்கம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.