Israel Palestine War: இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்.. 4 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனர்கள் பலி..!
இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
நவம்பர் 04, ஜெருசலேம் (World News): காஸாவின் (Gaza) கிழக்குப் பகுதியில் கான் யூனிஸ் நகருக்கு உட்பட்ட ஷேக் நாஸர் பகுதியில் இஸ்ரேல் (Israel) ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு மற்றும் மத்திய காஸாவில் ஹமாஸ் படையினருக்கு சொந்தமான ஆயுத கிடங்குகள் மற்றும் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. Iranian Student Strips In Protest: ஹிஜாப்பை எதிர்த்து உள்ளாடையுடன் போராடிய மாணவி.. அதிரடியாக கைது செய்த அரசு.!
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 07-ஆம் தேதி காஸாவில் உள்ள ஹமாஸ் படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில், சுமார் 1200 பேர் பலியானர். இதற்கு பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் தங்கியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், இதில் பாலஸ்தீனர்கள் (Palestine) 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 பாலஸ்தீனர்கள் பலி: