Texas Wildfires: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் பரவும் காட்டுத்தீ.. பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்..!
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் பரவும் காட்டுத்தீ, சுமார் 200,000 ஏக்கர் வரையிலான பரப்பளவில் பரவியுள்ளது.
பிப்ரவரி 29, டெக்சாஸ் (Texas): அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீ (Wildfire) ஏற்பட்டுள்ளது. வனத்துறையின் கூற்றுப்படி, 780 கிமீ சுற்றளவில் 2 லட்சம் ஏக்கர் மரங்கள் தீயில் எரிந்துள்ளன. இது தான் டெக்சாஸ் வரலாற்றிலேயே ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டாவது காட்டுத்தீ ஆகும். இதனை மிகப்பெரிய பேரிடராக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) அறிவித்துள்ளார். Erode Shocker: உறவினர் என நம்பியதற்கு 15 வயது சிறுமியை சீரழித்த கொடுமை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!
இந்த தீ விபத்து காரணமாக அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருவது அங்குள்ள மக்களுக்கும், அரசுக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அவசர கால நிலைமையை அறிவித்துள்ள டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், சுமார் 60 கிராமங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் கடுமையான வெயில், வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக வடக்கு டெக்சாஸில் காட்டுத்தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.