ICC Chairman Jay Shah (Photo Credit: @uccricketlive X)

டிசம்பர் 02, துபாய் (Sports News): சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஜெய் ஷா நேற்று (டிசம்பர் 01) அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்று கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ (BCCI) செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்க்லே (Greg Barclay) 3வது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார். Cricket Match-Fixing: மேட்ச் பிக்சிங் புகாரில் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர்கள் கைது.. முழு விவரம் உள்ளே..!

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ-யின் முன்னாள் செயலர் ஜெய் ஷா (Jay Shah) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஜகன்மோகன் டால்மியா, சரத் பவார், சீனிவாசன், சஷ்ஷாந்த் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5வது இந்தியர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றார். ஜெய் ஷா 6 ஆண்டு காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதான ஜெய்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.