Israel Vs Turkey: இஸ்ரேலைக் குறி வைக்கும் துருக்கி.. தீவிரமாகும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு நடுவே இஸ்ரேல் - துருக்கி போர் ஏற்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

Israel vs Turkey (Photo Credit: @yashar X)

ஜனவரி 09, ஹமாஸ் (World News): பாலஸ்தீனத்தின் ஆதரவு ஆயுதக் குழுவான ஹமாஸ் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 20 நிமிடங்களில் 5000க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏறி இஸ்ரேலை திணறடித்தது ஹமாஸ். மேலும் ஏராளமான ஹமாஸ் படையினர் பேராஷூட் மூலமாக எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுமட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சிறைபிடித்து சென்றனர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்:

ஹமாஸின் திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் (Israel Hamas War) தொடுப்பதாக அறிவித்தது. ஹமாஸின் கடைசி நபரினை அளிக்கும் வரை இந்தப் போர் தொடரும் என்று சூளுரைத்தது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இன்று வரை நடத்தி வருகிறது. Nepal Earthquake: நேபாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு.. பீதியில் சாலைக்கு ஓடி வந்த மக்கள்..!

அமெரிக்காவின் ஆதரவு:

ஹமாஸின் வேர் அறுத்த பின்னரே ஓய்வோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்கா முழு ஆதரவளித்து வருகிறது. மேலும் இந்தியா இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகள் தீவிரவாதத்தை எப்போதும் ஏற்க முடியாது எனக்கூறி இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. அதேசமயம் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் உதவிகளை செய்து வருகின்றனர். இருப்பினும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள் போர் நிறுத்தத்தினையும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவாறு வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

ஈரான் தாக்குதல்:

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தெக்ரானில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் கூறியது. அதன்படியே தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரண்டு முறை பெரும் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என்றும் மிரட்டி வருகிறது. மேலும் இஸ்ரேலை ஒடுக்க அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலகப்போர் மூன்று நடக்குமோ என்று உலக நாடுகளே பீதியில் உள்ளன.

இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமான பேச்சு பொருளாக இருக்கிறது. இந்தப் போரினால் காசா மக்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளனர். மக்களின் சிவில் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும் இஸ்ரேல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. போரினால் பல மக்கள் தங்களது இருப்பிடத்தினை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக நாடு கடந்து செல்கின்றனர். அதைவிட கொடூரம் மனிதாபிமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. V Narayanan: இஸ்ரோ தலைவராக குமரியை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு.!

இஸ்ரேல் - துருக்கி போர்:

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45, 028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் - துருக்கி இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டோமன் பேரரசை உருவாக்கும் நோக்கத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் இருக்கிறார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளது போருக்கு காரணமாக அமையலாம் என்று கூரப்பப்டுகிறது.

ஒட்டோமன் பேரரசு (Ottoman Empire):

ஒட்டோமன் பேரரசு என்பது கிபி 14ம் நூற்றாண்டு முதல் கிபி 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இருந்த ஒரு மன்னராட்சி பகுதியாகும். துருக்கியை தலைமையிடமாக கொண்டு இந்த ஒட்டோமன் பேரரசு செயல்பட்டது. இந்த பேரரசின் நிலப்பகுதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிக்கொண்டே இருந்தது. தற்போது இந்த பேரரசின் கீழ் இருந்த நிலப்பகுதிகள் பல நாடுகளில் சிதறி கிடக்கின்றன. அதாவது துருக்கி, பல்கேரியா, அல்பேனியா, ரோமானியா, கிரீஸ், கொசோவா, போஸ்னியா மற்றும் கெர்ஜிகோவினா, உக்ரைன், இஸ்ரேல், ரஷ்யா, இத்தாலி, மோன்டினிகுரோ, ஈரான், சிரியா, லெபனான், பாலஸ்தீனனம், எகிப்து, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அந்த பேரரசியின் நிலப்பகுதிகள் பிற நாடுகள் வசம் சென்றன. தற்போது துருக்கி அதிபர் எர்டோகன் தனது நாட்டை சுற்றியுள்ள பிற பகுதிகளை பிடித்து ஒட்டோமன் பேரரசு பகுதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நாடுகளை தன்வசப்படுத்தி இஸ்ரேலுடன் துருக்கி மோதலை தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now