Nepal Earthquake (Photo Credit: @ANI X)

ஜனவரி 07, காத்மாண்டு (World News): இந்தியா அருகில் உள்ள நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் (Earthquake) 6.35 மணிக்கு ஏற்பட்டது. கடும் வீரியம் கொண்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. நில அதிர்வு நேபாளத்தில் மட்டுமல்லாமல், சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு:

மேலும் நில அதிர்வானது, டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் வலுவாக பதிவாகியுள்ளது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் நிலம் நடுங்குவதை உணர்ந்து பாதுகாப்புக்காக வீடுகளை விட்டு வெளியில் விரைந்தனர். நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன.

மேலும் நேபாளம் மற்றும் இந்தியாவிலுள்ள அவசரகால மீட்புக் குழுக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் மக்கள் அமைதியாக இருக்குமாறும், அதே சமயம் எச்சரிக்கையாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

டெல்லி, பீகார், அஸ்ஸாமிலும் உணரப்பட்ட தாக்கம்: