Indian Man Jailed In Singapore: தவறாக அனுப்பிய பணத்தை திருப்பித் தராத இந்தியர்.. 9 வார சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..!
தனது கணக்கில் தவறாக மாற்றப்பட்ட பணத்தை எடுத்ததற்காக இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அக்டோபர் 15, சிங்கப்பூர் (World News): இந்தியாவை சேர்ந்த 47 வயதான நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் (Singapore Court) 9 வார சிறை தண்டனை (Jail) விதித்துள்ளது. அவர் பணம் தனது வங்கிக் கணக்கில் தவறாக மாற்றப்பட்ட SGD 25,000 பணத்தை (ரூ. 16 லட்சம்) திரும்பத் தரவில்லை. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, பெரியசாமி மதியழகன் என்பவர் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த பணத்தை தனது கடனை அடைக்கப் பயன்படுத்தியதாகவும், அதில் சிலவற்றை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பியதாகவும் நீதிமன்றத்தில் கூறினார். Resignation Letter: "திரும்பி வருவேன்" பதவி விலகல் கடிதத்தில் ட்விஸ்ட் வைத்த பணியாளர்.. ஆடிப்போன நிர்வாகம்.!
இவர், கடந்த 2021 முதல் 2022 வரை பிளம்பிங் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 06-ஆம் தேதி நிறுவனத்தின் நிர்வாகி பெண் ஒருவர் SGD 25,000-யை அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த பெண் தவறான பரிமாற்றத்தைச் (Wrong Money Transfer) செய்த பிறகு, பெரியசாமியின் வங்கியில் நடந்த தவறான பணப்பரிமாற்றம் குறித்து கூறி, பணத்தை மீட்டுத்தர வங்கியின் உதவியை நாடினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று, வங்கி அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அந்தப் பெண் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், எந்த பயனும் இல்லாததால் அதே ஆண்டு மே 23-ஆம் தேதி அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில், அந்தப் பெண்ணுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என பெரியசாமி தெரிவித்தார். மேலும், SGD 1,500 மாதாந்திர பணமாக செலுத்துவதாக கூறினார். ஆனால், இன்றுவரை எந்தவித தொகையையும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில், சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 9 வார சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)