Kenya Cult Issue: தோண்டத்தோண்ட 200 சடலங்கள்.. சொர்க்கத்திற்கு போக பாதிரியாரை நம்பி பட்டினியாக, உயிருடன் புதைக்கப்பட்ட மக்கள்.. கென்யாவில் பயங்கரம்.!

பாதிரியார் மெக்கன்சி என்பவர் தன்னை நம்பிய சீடர்களை நம்பவைத்து, அவர்களை பட்டினி போட்டு போர்வையில் சுற்றி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Kenya Cult Issue (Photo Credit: The Guardian / ABC News)

மே 16, கென்யா (World News): ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, மலிண்டி கடலோர நகரில் ஷாகாகோலா வனப்பகுதி இருக்கிறது. அங்கு சிலரின் உடல் புதைந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட பணியின் போது 47 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் அனைத்து தரப்பிலும் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கின்றனர். அப்போது, சர்வதேச கிறிஸ்துவ ஆலயத்தின் பாதிரியார் பால் தெங்கி மெக்கன்சி (Paul Mackenzie) என்ற நபரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்துள்ளனர்.

இவரின் சீடர்களாக இருந்தவர்களிடம், சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பட்டினியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் சீடர்களாக இருந்த மக்களும் இவற்றை உண்மை என்று எண்ணி, பட்டினி இருந்து சொர்க்கத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இவர்களில் 15 பேர் மட்டுமே காவல் துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். Lyca Productions ED Search: பொன்னியின் செல்வனை தயாரித்து வழங்கிய, லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!

விசாரணைக்கு பின்னர் பால் மெக்கன்சி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அதிகாரிகளின் காவலில் இருந்தபோது சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை. அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன.

கிட்டத்தட்ட 800 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலப்பகுதியினை மூடி சீல் வைத்துள்ள அதிகாரிகள், அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை நடைபெற்ற மீட்பு பணிகளின் முடிவில் 201 சடலங்கள் அங்கிருந்து மொத்தமாக மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் பச்சிளம் குழந்தைகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சொர்க்கத்திற்கு என்று மக்களிடையே பொய்யுரைத்து, அவர்களை சூரியனுக்கு முன்பு விரதம் இருக்க வைத்துள்ளனர். இதனால் உயிரிழப்பு நாடடைந்து, இதனை தற்கொலையாக மாற்றி கொடூரமாக ஒவ்வொருவரையும் ஈவு இரக்கம் இன்றி புதைத்துள்ளனர். Women Suicide: கள்ளக்காதல் மோகத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்.. உயிரைவிட்ட பாசக்கார மனைவி.. கண்ணீர் சோகம்.!

பாதிரியார் மெக்கன்சி தனது சீடர்கள் மற்றும் அவரின் குழந்தைகளை தற்காலிக வீடுகளில் அடைத்து வைத்து, அவர்களுக்கு உணவு மற்றும் நீர் கொடுக்காமல் கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சாப்பிடாமல் மூச்சு விட சிரமப்பட்டு உயிருடனும் மண்ணில் வைத்து புதைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை பல இன்னலுக்கு உள்ளாக்கிய பாதிரியார் மெக்கன்சி, மேற்கூரை உள்ள வீடு, நாற்காலி & கட்டிலில் வாழ்க்கை, தொலைக்காட்சி பொழுதுபோக்கு என ஆடம்பரமாக இருந்து வந்துள்ளார்.