US Forest Fire Video: நெஞ்சை பதறவைக்கும் காட்டுத்தீ.. உயிரை கையில்பிடித்து அவசர அவசரமாக வெளியேறும் மக்கள்.. விபரம் உள்ளே.!
இந்த நிலையில் தான் அமெரிக்காவையும் காட்டுத்தீ நெருங்கியுள்ளது.
ஆகஸ்ட் 25, லூசியானா (Louisiana, United States): அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுகள் (Hawaii) கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காட்டுத்தீ தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டது. அங்குள்ள மௌயி தீவுகளில் (Maui Forest Fire) ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 110 பேர் பரிதாபமாக பலியாகினர். பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் இருந்த மரங்கள், வீடுகள், குடியிருப்புகள் தீக்கு இறையாகின.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள லூசியானா (Louisiana), மேரிவில்லி (Merryville) பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியதை தொடர்ந்து, அங்குள்ள 1000 வீடுகளை சேர்ந்த மக்கள் அனைவரும் அவசர கதியில் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். NTR District Accident: வளைவில் வேகத்துடன் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்.!
லூசியானா - டெக்சர்ஸ் மாகாண (Louisiana-Texas Border) எல்லைப்பகுதியில் இருக்கும் நகருக்கு அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், மக்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேரிவில்லே நகரில் இருந்து 2 மைல் தூரத்தில் காட்டுத்தீ பரவியுள்ளதால், நகரில் இருக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். மக்கள் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான் இடங்களுக்கு பயணிக்கின்றனர். தற்போது வரையில் 13,000 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகியுள்ளது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மீப்புப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.