Americans Killed: ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழப்பு: 17 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அமெரிக்கா.!

22 அமெரிக்கர்களின் இழப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Joe Biden (Photo Credit: Twitter)

அக்டோபர் 12 , வாஷிங்க்டன் (Washington DC): அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் (White House), நேற்று இஸ்ரேலில் (Israel) ஹமாஸ் (Hamas Group) பயங்கரவாதிகள் யூதர்களுக்கு (Jewish Community) எதிராக முன்னெடுத்துள்ள தாக்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யூத தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் (Joe Biden), "நான் குழந்தைகளின் தலையை பயங்கரவாதிகள் வெட்டிக்கொலை செய்வார்கள் என எண்ணிப்பார்க்கவே இல்லை. நாம் கவனமுடன் இருக்கிறோம். மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் வழியே இஸ்ரேலுக்கு தேவையான போர் ஆயுதங்கள் வழங்ப்பட்டு வருகின்றன.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை போல, அவர்களை விட கொடூரமாக பல கொலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். அமெரிக்கர்களும் அங்கு பிணையக்கைதியாக இருக்கின்றனர். அவர்களை பத்திரமாக அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும். தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கும்" என கூறினார். Superfast Express Train Derail: அதிவேக விரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து: 4 பேர் பலி., 50 பேர் படுகாயம்.. பீகாரில் நடந்த சோகம்.! 

முன்னதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செயலாளர் ஆண்டனி பிலிங்கன் (US State Department Secretary, Antony Blinken) தெரிவிக்கையில், "17 அமெரிக்கர்களின் நிலை குறித்து எங்களுக்கு இன்னும் தகவல் இல்லை. அவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணையக்கைதியாக பிடித்து வைத்திருக்கலாம் என எண்ணுகிறோம். 22 அமெரிக்கர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் நிலைமையின் தீவிரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

கடந்த அக். 07ம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக திடீரென போரை அறிவித்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு, பாலஸ்தீனியம் - இஸ்ரேல் எல்லை தடுப்பு சுவர்களை உடைத்து இஸ்ரேலுக்குள் புகுந்து கொலைவெறியாட்டம் ஆடி வருகின்றனர். கண்ணில் பட்டோரை வீடு-வீடாக சென்று கொலை செய்தனர்.

இஸ்ரேலை அழிக்க எண்ணி 2 நாட்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தினர். முதலில் தாமதமாக சுதாரித்த இஸ்ரேல், தனது நாட்டின் இராணுவத்தை கொண்டு பாலஸ்தீனியத்தின் காசா நகரில் மக்களை வெளியேற அறிவுறுத்தி, ஹமாஸை ஒழிக்க வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.