US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024.. பாலியல் முறைகேட்டில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்.!
டொனால்ட் டிரம்ப் மற்றொரு பாலியல் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
நவம்பர் 01, சான் ஜோஸ் (World News): அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இன்னும் சில மாதங்களே இருப்பதால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், பின் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிடுகிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பிரச்சாரங்கள் நடந்துக்கொண்டே இருக்கிறது.
பாலியல் முறைகேடு: டொனால்ட் டிரம்ப், 1993 ஆம் ஆண்டு டிரம்ப் டவரில் முன்னாள் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் மாடல் ஸ்டேசி வில்லியம்ஸை தகாத முறையில் தொட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு வாரத்திலேயே, அவர் மற்றொரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த குற்றச்சாட்டு நியூயார்க் ஹோட்டலில் அதே ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. மிஸ் ஸ்விட்சர்லாந்து 1992 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பீட்ரைஸ் கெயுல், இஸ்தான்புல்லில் நடந்த மிஸ் ஐரோப்பா போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றபோது, டிரம்ப் ஆல் நியூயார்க் ஹோட்டல்க்கு அழைக்கப்பட்டுள்ளார். அப்போது டிரம்ப் அவரை தகாத முறையில் தொட்டதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.