Brazil Drought: 122 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி.. அமேசான் நதி வற்றி பரிதவிக்கும் பிரேசில்..!
பிரேசிலில் உள்ள அமேசான் பகுதியில் பதிவாகியிருக்கும் மிக மோசமான வறட்சியின் காரணமாக, அதன் கரையில் உள்ள கிராமங்கள் உணவு, தண்ணீர் மற்றும் போக்குவரத்து இன்றி தவிக்கின்றன.
அக்டோபர் 05, பிரேசிலியா (World News): பிரேசிலில் உள்ள அமேசான் ஆற்றின் (Amazon River) இரண்டு பெரிய துணை நதிகளில் ஒன்றான சோலிமோஸ் (Solimoes), கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அமேசான் பிராந்தியத்தில் பதிவாகிய மிக மோசமான வறட்சியை (Drought) சந்தித்துள்ளது. அதன் கரையில் உள்ள கிராம மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் போக்குவரத்து இல்லாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சியாகும். Russia America Fighter Jet: அமெரிக்கா போர் விமானத்தை மோதுவது போல சீறிப்பாய்ந்த ரஷிய போர் விமானம்.!
கடும் வறட்சி:
பெருவில் உள்ள ஆண்டிஸிலிருந்து (Andes) கீழே பாயும் சொலிமோஸ் அளவு, வரும் வாரங்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நதிக்கரையில் (Riverside) உள்ள கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. படகுகள் பயணிக்க முடியாத அளவுக்கு ஆழமற்ற தண்ணீரில் போக்குவரத்து இல்லாமல், அவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், சோலிமோஸ் ஆற்றங்கரை ஒரு பெரிய நீண்ட மணற்பரப்பாக மாறியுள்ளது. கிராம மக்கள் கொளுத்தும் வெயிலில் தங்களுக்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு, சுமார் 2 மணி நேரம் நடந்து செல்கின்றனர்.
பருவநிலை மாற்றம்:
அமேசான் ஆற்றங்கரையில் வாழும் பழங்குடி மக்களுக்கு (Tribal People) மீன்பிடித் தொழில் மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி மீன்கள் மறைந்துவிட்டன. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை அமேசானில் உள்ள ஆறுகள் வறண்டு போவதாகவும், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காட்டுத்தீ (Forest Fire) ஏற்பட்டு, வறண்ட தாவரங்களை அழித்து வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.