Hindu Temple Desecrated: கனடாவில் இந்து கோவில் அவமதிப்பு; காலிஸ்தானிய ஆதரவாளர்கள் சர்ச்சை செயல்.!

குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் & இந்திய தூதரகங்கள் காலிஸ்தானிய ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Hindu Temple Desecrated (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 13, கனடா (World News): இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. உள்நாட்டில் குழப்பம், மாநில அளவில் எழும் பிரச்சனை என்பவை எப்படி இருந்தாலும், அதனை சமாளித்து தன்னை நிலைநிறுத்துகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை தொடரும் பிரச்சனைகளால் முக்கியமானவை ஜம்மு காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் தொடர்பான பிரச்சனைகள் தான். காலிஸ்தான் பிரச்சனையை மையப்படுத்தி கடந்த சில மாதங்களாக சர்ச்சை சம்பவங்கள் நடைபெறுகின்றன. Oppo Find X6 Pro: ஓப்போ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; Oppo Find X6 Pro சிறம்பம்சங்கள் இதோ.!

குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் & இந்திய தூதரகங்கள் காலிஸ்தானிய ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு என தொடருகிறது.

இந்நிலையில், கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் புகழ்பெற்ற லட்சுமி நாராயண் கோவில் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அங்குள்ள இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.