Khalistan Supporters Burn Indian Flag: இந்திய தேசியக்கொடி, பிரதமர் மோடியின் உருவ பொம்மையில் எச்சில் துப்பி, தீவைத்து கொளுத்திய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்: கனடாவில் அதிர்ச்சி செயல்.!

அவர்கள் கனடாவில் குடிபெயர்ந்து தற்போது இந்திய அரசுக்கு கனடா அரசு மூலமாக நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.

Khalistan Supporters Protest Torondo (Photo Credit: Twitter)

செப்டம்பர் 26, டொராண்டோ (World News): கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் காலிஸ்தான் (Khalistan Supporters) பிரிவினைவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ (National Investigation Agency NIA) அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில், காலிஸ்தான் புலிகள் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சமீபத்தில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஒருவரும், இரண்டு குழுக்களுக்கு இடையேயான சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கனடா (Canada) நாட்டவராக குடியுரிமை பெற்றவர் என குறிப்பிட்டு, அந்நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசு சம்பந்தப்பட்டு இருக்கிறது என குற்றசாட்டை முன்வைத்தது. Santhosh Narayanan visits SriLanka: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. விரைவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!

இதனை இந்தியாவும் மறுத்து தனது கண்டனத்தை தெரிவித்து பதில் கருத்தை முன்வைத்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. கனடா அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பிற நாடுகளின் ஆதரவை நாடி இருக்கிறது. ஆனால், அவை மௌனம் காத்து வருகின்றன.

இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலிஸ்தான் நாடு வேண்டும் என்ற முடிவுடனும் காலிஸ்தானிய பிரிவினைவாதிகள் இங்கிலாந்து, கனடா உட்பட பல நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சில இடங்களில் இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. Tiruppur Shocker: சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலம்; வடமாநில பெண் கற்பழித்து கொலை?.. திருப்பூரில் பயங்கரம்.!

இந்நிலையில், கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் நேற்று காலிஸ்தானிய ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டது. அங்கு இந்திய தேசியக்கொடி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவமதிக்கப்ட்டனர்.

காலிஸ்தானிய ஆதரவாளர் ஒருவர் பிரதமரின் புகைப்படத்தில் எச்சில் துப்பி, தீவைத்து கொளுத்தி ஆவேசமாக செய்யப்பட்டார். மற்றொருவர் பிரதமரின் புகைப்படத்தை செருப்பால் தாக்கினார். இந்த சம்பவத்தை தடுக்க கனடா அரசு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.