Alibaba Plans To hire 15,000 People: 16 ஆயிரம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அலிபாபா நிறுவனம்; மாஸ் அறிவிப்பை வெளியானது..!

சீனாவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாக இருப்பது அலிபாபா குழுமம். இந்த நிறுவனம் சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களை வழங்கும் பிரிவில் முதன்மை நிறுவனமாகவும் இருந்து வருகிறது.

Alibaba | Job Hiring (Photo Credit: Boomberg / Pixabay)

மே 26, ஹேங்சோயு (Hangzhou, China): சீனாவில் தோன்றி சர்வதேச அளவில் தொழில்நுட்பம் மற்றும் பிற வேலைகளை திறம்பட செய்து வரும் நிறுவனம் அலிபாபா (Alibaba). இது சீனாவில் (China) மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் 15 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டு இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கடந்த வியாழக்கிழமை Weibo வலைத்தளத்தில் வெளியான அறிக்கையின்படி, ஆறு வணிக பிரிவுகளின் மூலமாக மொத்தமாக சுமார் 15 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த அலிபாபா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் பல்கலைக்கழக பட்டதாரிகளும் இதில் அடங்குவார்கள். Plane Door Open Mid-Air: நடுவானில் அவசரகால கதவை திறந்துவிட்ட பயணி; கதறிய பயணிகள்.. பரபரப்பு வீடியோ வெளியானது.!

Alibaba Head Office (Photo Credit: Wikipedia)

முன்னதாக நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலிபாபாவின் கிளவுட் பிரிவு 7% ஊழியர்களை குறைக்க தொடங்கியுள்ளது. இவர்களில் தகுதி உடையோர் பிற பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டு, எஞ்சியோர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஜாங், தனது நிறுவனத்திற்காக 2 இலட்சத்து 35 ஆயிரம் பணியாளர்களை நியமனம் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் சர்வதேச அளவிலான பணியாளர்கள் ஆவார்கள். திறமையானவர்களுக்கு எப்போதும் திறந்த பல்கலைக்கழகமாக அலிபாபா நிறுவனம் இருக்கும். நாங்கள் ஆட்கள் சேர்ப்பு பணியை எப்போதும் நிறுத்தமாட்டோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement