IPL Auction 2025 Live

Mexico’s First Woman President: மெக்சிகோவின் முதல் பெண் அதிபர்.. கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு..!

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக ஷெயின்பாம் பதவியேற்றார்.

Claudia Sheinbaum (Photo Credit: @France24_es X)

அக்டோபர் 01, மெக்சிகோ (World News): வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கிளாடியா ஷேன்பாம் ( போட்டியிட்டு அறுபது சதவீத வாக்குகளை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். இதை அடுத்து மெக்சிகோவின் 200 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக (First Woman President) 62 வயதான கிளாடியா வெற்றி பெற்றார். மேலும் ரோமன் கத்தோலிக்க சமூகப் பிரிவை பெரும்பான்மையாக கொண்ட மெக்சிகோவில் யூத இனத்தினைச் சேர்ந்த ஒருவர் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். UK Woman Recounts Sexual Trauma: ஆன்மீக பெயரில் பலாத்கார கொடுமை: இங்கிலாந்து இளம்பெண்ணுக்கு இந்தியாவில் துயரம்.. அதிர்ச்சி தரும் உண்மை.!

பருவநிலை விஞ்ஞானியான கிளாடியா ஷேன்பாம் 2007ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றவர். மேலும் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நெக்சிகோ மாநகரின் முதல் பெண் மேயராக பணிபுரிந்தார். கடந்த 2000ல் இருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மெக்சிகோவில் தற்போது குற்ற செயல்களும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வரும் சூழலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா இன்று பதவியேற்றார்.