Ecuador President Candidate Shot: அதிபர் வேட்பாளர் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் சுட்டுக்கொலை; மக்கள் & அதிகாரிகள் முன்பு நடந்த பயங்கரம்... அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
அரசு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல், முன்னாள் அதிபர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக உரக்க குரல் கொடுத்த அதிபர் வேட்பாளர் எக்குவடோர் நாட்டில் சுட்டு கொல்லப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது. பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் ஏறியவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆகஸ்ட் 10, எக்குவடோர் (Ecuador): தென் அமெரிக்காவில் இருக்கும் குடியரசு நாடான எக்குவடோரில், ஆகஸ்ட் 20ம் தேதி அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் Build Ecuador Movement கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக பெர்னாண்டோ வில்லாவின்சென்சியோவ் (Fernando Villavincenclo) என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் தற்போதைய அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ (Guillermo Lasso) அதிபர் பதவியில் இருக்கிறார். தற்போது எக்குவடோரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
இதனால் அவரின் மீது ஆத்திரத்தில் இருந்த கும்பல், நேற்று அந்நாட்டின் தலைநகர் குய்டோவில் (Quito) தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் ஏற வந்தவரை சரமாரியாக (Ecuador President Candidate Shot Dead) சுட்டுக்கொலை செய்தது. உயிரிழந்த பெர்னாண்டோவுக்கு 59 வயது ஆகிறது. YouTube Update: யூடியூப் இந்த ஆப்சன்-ஐ உபயோகம் செய்கிறீர்களா?.. உங்களுக்குத்தான் முக்கிய தகவல்.. விபரம் உள்ளே.!
இந்த விசயத்திற்கு கடும் கண்டனத்துடன் கூறிய இரங்கலை அந்நாட்டின் அதிபர் லாஸ்ஸோ தெரிவித்துள்ளார். பெர்னாண்டோ முன்னாள் அதிபர்கள் செய்த ஊழல், குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து தனது குரலை பதித்து வந்துள்ளார்.
அரசுத்துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் நபர்களின் குற்றச்செயல்கள் குறித்த தகவலையும் அம்பலப்படுத்தி வந்துள்ளார். இதன்பின்னரே அவர் தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு வரும்போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அவர் எந்த கும்பலால்? எதற்காக? கொலை செய்யப்பட்டார் என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)