பிப்ரவரி 18, வதோதரா (Sports News): 2025ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் (Women's Premier League 2025) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த 4வது போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி (RCBW) அணி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாம் இடத்தில், குஜராத் (GGTW) அணியும், 3வது இடத்தில் டெல்லி (DCW) அணியும் இடம்பெற்றுள்ளன. தலா ஒரு போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவியுள்ள மும்பை இந்தியன்ஸ் (MIW) மற்றும் உபி வாரியர்ஸ் (UPW) முறையே நான்காவது மற்றும் 5வது இடத்தில் உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 5வது லீக் போட்டியில், மும்பை - குஜராத் அணிகள் மோத உள்ளன. இதில், மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும். இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. GG Vs MI Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதல்.. நேரலை பார்ப்பது எப்படி?

மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)