
பிப்ரவரி 19, கோடம்பாக்கம் (Cinema News): அறிவழகன் இயக்கத்தில், 7ஜி சிவா தயாரிப்பில், தமன் எஸ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சப்தம் (Sabdham). ஆவிகளுடன் பேசி அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கலாம் என நினைக்கும் நாயகனுக்கு, ஆவிகளுடன் பேசிய பின்னர் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் அதில் இருந்து அவர் தப்பித்தது எப்படி? என்பது குறித்த கிரைம் தில்லர் - ஹரர் (Crime Thiller Horror Movies) கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படம், 28 பிப்ரவரி 2025 அன்று திரைக்கு வருகிறது. Suzhal 2 Official Trailer: கிரைம் தில்லரில் மிரளவைக்கும் காட்சிகள்.. ஓடிடியில் வெளியாகும் சுழல் 2 ட்ரைலர் இதோ.!
லட்சுமி மேனன் நடித்துள்ளார்:
நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் தோன்றியுள்ள நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon), நடிகர் ஆதி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வரிகளை விவேகா எழுதி இருக்கிறார். எடிட்டிங் பணிகளை சபு ஜோசப் விஜே மேற்கொண்டுள்ளார். இன்று படத்தின் ட்ரைலர் காட்சிகள் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.