Niram Marum Ulagil Trailer Visuals (Photo Credit: YouTube)

பிப்ரவரி 19, கோடம்பாக்கம் (Chennai News): அம்மா என்ற வார்த்தைக்குள் எண்ணிலடங்காத பிணைப்புகளும், பாச பந்தங்களும் உண்டு. தானாடாவிட்டாலும் தந் தசையாடும் என்ற வகையில், அம்மாவின் மீதான அன்பு எதையும் செய்யத்துணியும். அம்மாவின் பாசத்தை உவமைப்படுத்தி பல படங்கள் வெளியாகி இருந்தாலும், நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களுக்கு மக்களை திரையுடன் கட்டிப்போடும் வகையிலான கதையுடன் தயாராகியுள்ளது நிறம் மாறும் உலகில் (Niram Marum Ulagil) திரைப்படம். பிரிட்டோ ஜேபி இயக்கத்தில், தேவ் பிரகாஷ் ரெகன் இசையில், சிக்னேச்சர் ப்ரொடெக்சன்ஸ், ஜிஎஸ் சினிமாஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள நிறம் மாறும் உலகில் திரைப்படம், 07 மார்ச் 2025 அன்று முதல் திரைக்கு வருகிறது. Sabdham Official Trailer: "செத்ததுக்கு அப்புறமும் வாழ்க்கை இருக்கு" - ஆதி, லட்சுமி மேனனின் நடிப்பில் மிரளவைக்கும் சப்தம்.. படத்தின் ட்ரைலர் உள்ளே.! 

நிறம் மாறும் உலகில் திரைபடக்குழு (Niram Marum Ulagil Movie Team):

நடிகர்கள் பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி நட்ராஜ், சாண்டி மாஸ்டர், யோகி பாபு, விக்னேஷிகாந்த், ரிஷிகாந்த், ஏகன், கனிகா, வடிவுக்கரசி, ஆடுகளம் நரேன், மைம் கோபி, சுரேஷ் சக்கரவர்த்தி, சுரேஷ் மேனன் உட்பட பலரும் படத்தில் நடித்து இருக்கின்றனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்டன் ராஜா ஒளிப்பதிவில், தமிழ் அரசன் எடிட்டிங்கில், ஏஎஸ் தாவுத், அர்ஜுன் ராஜ்குமார், அக்ஷ்ரத் பாலகிருஷ்ணன் வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இன்று படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது.

நிறம் மாறும் உலகில் டிரைலர் (Niram Marum Ulagil Trailer):