Match 6: TATA WPL 2025 | DC Vs UP Warriorz | Toss Update (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 19, வதோதரா (Cricket News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில், பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆறாவது நாள் ஆட்டத்தில், உபி வாரியர்ஸ் அணி - டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதுகிறது. இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் இறுதி இரண்டு இடங்களில் இருக்கிறது. உபி வாரியர்ஸ் தான் எதிர்கொண்ட 1 போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் இன்றாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கும். அதேநேரத்தில், 2 போட்டியை எதிர்கொண்டு ஒன்றில் வெற்றி அடைந்த டெல்லி, முன்னேற்றத்துக்காக போட்டியிடும். இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்குகிறது. Will Young & Tom Latham Century: சதம் அடித்து விளாசிய வில் யங், டாம் லதாம்.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி அசத்தல் ரன் குவிப்பு.! 

அணி வீரர்கள் அப்டேட்:

இன்று மெக் லன்னிங் (Meg Lanning) தலைமையேற்று வழிநடத்தும் டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் அணி (Delhi Capitals Playing Squad)-யில், ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னபெல் சதர்லேண்ட், மரிசேன் காப், ஜெஸ் ஜோனாசென், சாரா பிரைஸ், நிகி பிரசாத், ஷிகா பாண்டே, அருண்டதி ரெட்டி, மின்னு மணி ஆகியோர் களமிறங்குகின்றனர். தீப்தி சர்மா (Deepti Sharma) வழிநடத்தும் உபி வாரியர்ஸ் பெண்கள் கிரிக்கெட் அணி (UP Warriorz Playing Squad)-யில், கிரண் நவ்கயர், பிரிந்தா தினேஷ், உமா செட்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், சினெல் ஹென்றி, சோபியே எக்லிஸ்டோன், ராஜேஸ்வரி கயக்வாட், கிராந்தி கவுட் ஆகியோர் களமிறணுகின்றனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு:

டெல்லி - உபி வாரியர்ஸ் பெண்கள் அணியின் (DC Vs UP Warriorz Women's WPL 2025) சார்பில் களமிறங்கும் வீரர்களின் பட்டியல்:

உபி வாரியர்ஸ் அணியின் வீரர்கள்: