Match 1: PAK Vs NZ | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC / @TheRealPCB X)

பிப்ரவரி 19, கராச்சி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில், இன்று கோலாகலமான கொண்டாட்டத்துடன் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித்தொடர் தொடங்கியது. 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மோதிக்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) பவுலிங் தேர்வு செய்தார். இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. Will Young & Tom Latham Century: சதம் அடித்து விளாசிய வில் யங், டாம் லதாம்.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி அசத்தல் ரன் குவிப்பு.! 

320 ரன்கள் குவித்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி (New Zealand Cricket):

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய வில் யங் (Will Young) 113 பந்துகளில் 107 ரன்கள் அடித்து விளாசினார். 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மைதானத்தை அதிரவைத்து, 37.2 வது ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். தொடக்கத்திலேயே வில் யங் அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியதால், தேவன் கான்வே (Devon Conway) 17 பந்துகளில் 10 ரன்கள், கேன் வில்லியம்சன் (Kane Williamson) 2 பந்துகளில் 1 ரன்கள், டர்யல் மிட்செல் 24 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறியபோதும், அணியின் உற்சாகம் மிகப்பெரிய ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்தது. வில் யங் - டாம் லேதம் ஜோடி அடித்து ஆடியது. டாம் லேதம் 104 பந்துகளில் 118 ரன்கள் அடித்து மிகப்பெரிய அளவில் அணியின் ரன்களை உயர்த்த உதவினார். இறுதி வரை அவர் தனது விக்கெட்டையும் இழக்கவில்லை. பின் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் (Glenn Phillips) 39 பந்துகளில் 61 ரன்கள் சேகரித்து அசத்தினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்த நியூசிலாந்து 320 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்துவீசிய அப்ரார் அஹ்மத் (Abrar Ahmed), நடப்பு தொடரில் முதல் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். மேலும், நசீம் ஷா (Naseem Shah), ஹாரிஸ் ரவூப் (Haris Rauf) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். PAK Vs NZ: வில் யங், டாம் லாதம் சதம் அடித்து விளாசல்.. சொந்த மண்ணில் திணறிய பாகிஸ்தான்.. 321 ரன்கள் இலக்கு.!

பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் நின்று ஆடி படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்:

இதனால் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை எதிர்கொள்ள இயலாமல் திணறிப்போயினர். மேலும், நின்று ஆடுவதாக நினைத்து அணியின் வீழ்ச்சிக்கு அவர்களே வழிவகை செய்துகொண்டனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் சவுத் ஷகீல் 19 பந்துகளில் 6 ரன்கள், பாபர் அசாம் (Babar Azam) 90 பந்துகளில் 64 ரன்கள், முகமது ரிஸ்வான் 14 பந்துகளில் 3 ரன்கள், பகர் ஜமான் 41 பந்துகளில் 21 ரன்கள், சல்மான் அஹா (Salman Agha) 28 பந்துகளில் 42 ரன்கள், தையப் தாகீர் 5 பந்துகளில் 1 ரன்கள், ஷாஹீன் அப்ரிடி 13 பந்துகளில் 14 ரன்கள், குஷ்தில் ஷா (Khushdil Shah) 49 பந்துகளில் 69 ரன்னும் அடித்து அவுட்டாகி வெளியேறினர். சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி திணறிக்கொண்டு இருந்தபோது குஷ்தில், ஜமான் ஆகியோர் நின்று ஆடுவதுபோல தோன்றினாலும், அவர்களும் தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் களத்தில் இருந்த நசீம் ஷா 15 பந்துகளில் 13 ரன்னும், ஹரி 10 பந்துகளில் 19 ரன்னும் அடித்து அவுட்டாகினார். மொத்தமாக 47.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 260 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இதன் வாயிலாக பாகிஸ்தானை நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் தொடரில் சொந்த மண்ணில் தோல்வியடைய வைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் மாட் 2 விக்கெட்டையும், வில் மற்றும் மிட்செல் சான்டனர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

இன்றைய போட்டியில் ஒவ்வொருவரையும் வியக்கவைத்த விக்கெட்:

பாகிஸ்தான் விமானப்படை சாகசத்துடன் தொடங்கிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி:

பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆசிப் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளன தலைவர் (PCB) மொஷின் ஆகியோர் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டபோது:

வில் யங் 100 ரன்களை கடந்து அசத்தல்:

டாம் லேதம் சதம் கடந்து சாதனை:

கேன் வில்லியமின் விக்கெட் பறிபோன காட்சி:

அப்ரார் அஹ்மத்தின் விக்கெட் நேர்த்தியை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பூரித்துப்போன காட்சி:

தேவன் கான்வே விக்கெட் எடுக்கப்பட்ட காட்சி:

சூப்பர்மேன் போல பறந்து விக்கெட் எடுத்த கிளென் (Glenn Phillips):

கிளென் கேட்ச் பிடித்த காட்சி மற்றொரு கோணத்தில்: