DC Vs UP W | Match 6 | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 19, வதோதரா (Sports News): மூன்றாவது பெண்கள் பிரீமியர் லீக் டபிள்யுபிஎல் 2025 போட்டித்தொடர், குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஆறாவது நாள் ஆட்டம் இன்று டெல்லி கேபிட்டல்ஸ் - உபி வாரியர்ஸ் பெண்கள் (Delhi Capitals Vs UP Warriorz Women's WPL 2025) அணி மோதியது. ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் உபி வாரியர்ஸ் (DC Vs UP Warriorz WPL 2025) பெண்கள் அணி பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. கிரண் நவ்காரே (Kiran Navgire) 27 பந்துகளில் 51 ரன்னும், வ்ரிந்தா தினேஷ் 15 பந்துகளில் 16 ரன்னும், தீப்தி ஷர்மா 7 பந்துகளில் 7 ரன்னும், ஸ்வீதா செஹ்ராவத் (Shweta Sehrawa) 33 பந்துகளில் 37 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 14 பந்துகளில் 12 ரன்னும், சினிலே ஹென்றி 15 பந்துகளில் 33 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு உபி வாரியர்ஸ் அணி 166 ரன்கள் எடுத்தது. UPW Vs DC: டெல்லி அணிக்கு 166 ரன்கள் இலக்கு.. வெளுத்து வாங்கிய கிரண், சுவேதா ஷெராவத்..!

போராடி டெல்லி அணி திரில் வெற்றி:

டெல்லி அணியின் சார்பில் விளையாடிய ஷபிலி வர்மா (Shafali Verma) 16 பந்துகளில் 26 ரன்னும், மெக் லேனிங் 49 பந்துகளில் 69 ரன்னும், அனபெல் சுதெர்லண்ட் 32 பந்துகளில் 32 ரன்னும், மரீசானே 16 பந்துகளில் 28 ரன்னும் அடித்து அசத்தினர். இறுதியில் 2 பந்துகளில் 1 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இறுதி ஓவரில் பீல்டர்களின் பதற்றம், எதிர் அணிக்கு ரன்களை குவிக்கவும் வாய்ப்பாக அமைந்தது. இறுதியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி அசத்தல் வெற்றி அடைந்தது. உபி அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் சோபி, தீப்தி, கிரேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இன்றைய ஆட்டம் டெல்லி அணி வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? சூப்பர் ஓவர் வருமா? என்ற பல எதிர்பார்ப்பு திக் திக் நிமிடங்களாக தொற்றிக்கொண்டது.

யாக்கர் பந்தில் அசத்தல் விக்கெட்:

மெக் லேனிங் அசத்தல் ஆட்டம்:

ஹென்ரியின் மனப்பூர்வமான உணர்வு வெளிப்பாடை காணவும்:

மைதானத்தை அதிரவைத்த ஹென்றி:

அருந்ததின் ரெட்டியின் அசத்தல் பந்துவீச்சு: