பிப்ரவரி 19, கராச்சி (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி, இன்று மதியம் 02:30 மணிக்கு பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்றது. நியூஸிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்கள் குவித்தது. மறுமுனையில் முதலில் பவுலிங் செய்து, பின் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ரன்கள் சேர்க்க இயலாமல் திணறிப்போனது. இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியுற்று, நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. PAK Vs NZ Highlights: சொந்த மண்ணில் படுதோல்வியை எதிர்கொண்ட பாகிஸ்தான்; வில், டாம், மிட்செல் அபாரம்.! நியூசிலாந்து அசத்தல் வெற்றி.!  

என்ன கேட்ச் சாரே? பக்கா மாஸ்:

இதனிடையே, ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வீரர் கிளன் பிலிப்ஸ் (Glenn Phillips), தனது கைகளை விட தூரத்தில் சென்ற பந்தை இலாவகமாக தாவிப்பிடித்து விக்கெட் எடுத்தார். ஒருநொடி அவரால் தான் விக்கெட் எடுத்தோமா? என்ற நம்பிக்கை இல்லை. அவ்வாறான சூழலில் அவர் விக்கெட் எடுத்ததை கண்டு வியந்துபோன அணியினர் அதிர்ச்சியில் இருக்க, நியூசிலாந்து அணியின் வீரர்கள் அவரை தூக்கிப்பிடித்து குலுக்கி உற்சாகப்படுத்தினர். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan), 10 வது ஓவரில் தனது பந்தை எதிர்கொண்டபோது, வில் ரூர்கி வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது ,  பந்தை சுழற்றி அடிக்க, லைனில் இருந்த கிளன், ஒரே ஜம்பில் பந்தை ஒருகையால் பிடித்து அசத்தினார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் ரிஸ்வான் 14 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார்.

கிளன் விக்கெட் எடுத்ததை கொண்டாடும் அணியினர்:

கிரிக்கெட் ரசிகர்களை உறையவைத்த தருணம்: