IPL Auction 2025 Live

Rishi Sunak Pen Ink: அழியும் மையுள்ள பேனாவில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர்; சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு.!

அரசு கோப்புகளில் பிரதமர் இடும் கையெழுத்து அழிக்கும் வகையிலான பேனா கொண்டு இடப்பட்டால், அதனை மாற்றி அமைக்க வழிவகை உள்ளதே என்பதை மேற்கோளிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன.

England PM Rishi Sunak (Photo Credit: Wikipedia)

ஜூன் 29, இங்கிலாந்து (World News): இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வாழ் இந்தியர் ரிஷி சுனக் (Rishi Sunak), அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து, அவ்வப்போது அவரை சுற்றிலும் சில சர்ச்சைகளும் வலம்வருகின்றன. தற்போது அவர் பேனா மை விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.

அதாவது, இங்கிலாந்து பிரதமராக பணியாற்றி வரும் ரிஷி சுனக், தனது பார்வைக்கு வரும் கோப்புகளை அழியாத மை உள்ள பேனாவை பயன்படுத்தி கையெழுத்திட வேண்டும். ஆனால், அவர் அரசு கோப்புகளில் அலட்சியமாக அழியும் வகையிலான மை உள்ள பேனாக்களை பயன்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. Kolar Shocker: வேறுஜாதி இளைஞருடன் காதல்; மகளை கொலை செய்த தந்தை.. காதலியின் நினைவில் தற்கொலை செய்த காதலன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

இந்த விஷயத்தை கண்டறிந்த அந்நாட்டின் எதிர்க்கட்சிகள், இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு சர்ச்சையில் ரிஷி சுனக் சிக்கி இருக்கிறார். இவ்விவகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், அரசு கோப்புகளில் பிரதமர் ரிஷி சுனக் அழியும் வகையிலான பேனாக்களை பயன்படுத்தவில்லை.

அவர் தனது சிறு குறிப்புகளை எடுத்துக்கொள்ளும் போது சாதாரண பேனாக்களை உபயோகம் செய்கிறார். அரசு கோப்புகளில் அவர் அவ்வாறான செயல்முறையை பின்பற்றவில்லை. இதில் விவாதிக்க ஏதும் தேவையில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.