Mountain Climbing: 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபலம்.. மலையேற்றத்தில் நடந்த சோகம்..!

இத்தாலியின் ஆடி தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ மலை ஏறும்போது, சுமார் 10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Audi Italy Head Fabrizio Longo (Photo Credit: @MirrorBreaking_ X)

செப்டம்பர் 03, லோம்பார்டி (World News): இத்தாலியில் ஆடி செயல்பாட்டுத் தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ (Fabrizio Longo), சமீபத்தில் மலை ஏறும் போது சுமார் 10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த சக நண்பர் ஒருவர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்றனர். Corona Virus: ஒரே வாரத்தில் திடீர் உச்சம்பெற்ற கொரோனா... 7 நாட்களுக்குள் 1000 பேர் மரணம்; அதிரவைக்கும் ரிப்போர்ட்.!

இதுகுறித்த தகவலின்படி, நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கிய ஆடி இத்தாலியின் இயக்குனர் (Italy Audi Director) ஃபேப்ரிசியோ லாங்கோ (வயது 62), மலைகளில் ஏறுவதை (Mountain Climber) விரும்பும் ஆர்வமுள்ளவர் ஆவார். இந்நிலையில், இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு அருகிலுள்ள மவுண்ட் அடமெல்லோவில் (Mount Adamello) சிமா பேயரில் ஏறும் போது, ​​அவர் சுமார் 10,000 அடி கீழே விழுந்து இறந்தார். ஆடி மூத்த நிர்வாகியின் உடல் (Fabrizio Longo Dies During Mountain Climbing) 700 அடிக்கு கீழே ஒரு பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரிசோலோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆடி இத்தாலி இயக்குநரின் குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்கு தேதியை பின்னர் அறிவிப்பார்கள். இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடங்களாக இத்தாலியில் ஆடி (Audi) நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தலைமை பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.