Afghanistan Flood: கனமழையால் மூழ்கிய ஆப்கானிஸ்தான்.. 300க்கும் மேல் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது.
மே 13, காபூல் (World News): ஆப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள பக்லான், தாகர் மற்றும் பதக்ஷன் ஆகிய வடக்கு மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பக்லான் மாகாணத்தில் மட்டுமே இந்த மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஐநா தெரிவித்திருக்கிறது. Paytm UPI Lite: பேடிஎம்மின் புதிய சேவை.. இதன் பயன்கள் என்னென்ன?.!
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தாலிபான் அரசும், ஐநாவின் உலக உணவு நிறுவனமும் செய்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தீவிரமாக எதிர்கொள்ளும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.