IPL Auction 2025 Live

Retired Major David Grusch: 2019ல் நடத்த விபத்தில் ஏலியன் உடல் பாகங்கள் மீட்பு? - முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி பரபரப்பு குற்றசாட்டு.!

ஏலியன்கள் புவிக்கு வந்துவிட்டதை அமெரிக்க அரசால் உறுதி செய்யப்பட்டாலும், அவற்றில் மர்மம் தொடருவது போல மறைப்பது ஏன் என அமெரிக்க விமானப்படை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Former US Air Force intelligence officer Retired Major David Grusch (Screengrab from GOP Oversight YT channel)

 

ஜூலை 27, அமெரிக்கா (World News): அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலும் ஏலியன்கள் (Aliens), வேற்றுகிரகவாசிகள் தொடர்பான பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன. வேற்றுகிரகவாசிகள் தொடர்பான விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக அவைகள் குறித்த உண்மையை எந்த நாடும் இன்று வரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

ஆனால், அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தாங்கள் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளை (Space Craft) பார்த்துள்ளோம். அவர்கள் எங்களை கடத்தி சென்று ஆராய்ச்சி செய்தார்கள் என்று கூறி உலக நாடுகளை அதிரவைத்தனர். அவ்வப்போது ஏலியன்கள் (Unidentified Flying Object - UFO) பறக்கும் தட்டு விடியோவும் உலா வரும். Virat & Rohit: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி – ரோஹித் ஷர்மா ஜோடி விரைவில் மாபெரும் சாதனை; அசத்தல் அப்டேட் இதோ.!

இந்நிலையில், அமெரிக்க விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் டேவிட் கிருஸ்ச் (Major David Grusch), அமெரிக்க அரசுக்கு ஏலியன்கள் நடமாட்டம் இருப்பது உண்மை என தெரியும். கடந்த 2019ல் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு விபத்திற்குள்ளானதில், அதில் இருந்து மனிதன் அல்லாத நபரின் உடல் மீட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான உண்மைகளை அரசு எதற்காக மறைகிறது?. ஏலியன்கள் புவிக்கு வந்துவிட்டதை அமெரிக்க அரசால் உறுதி செய்யப்பட்டாலும், அவற்றில் மர்மம் தொடருவது போல மறைப்பது ஏன்?. உண்மை தெரியவந்ததும் கதவை மூடிக்கொண்டு ஆலோசனைகள் நடைபெறுவது ஏன்?" என பல்வேறு கேள்விகளையும், கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

விமானப்படை அதிகாரியான டேவிட், பல உளவு ரீதியான வேலைகளிலும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அவர் விவரிக்கப்படாத முரண்பாடான நிகழ்வுகளின் குறித்து பகுப்பாய்வு செய்யும் (Unexplained Anomalous Phenomena - UAP)) பிரிவின் முக்கிய தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.