Russian President Health Status: மாரடைப்பால் படுக்கையறையில் மயங்கி கிடந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; பகீர் தகவல் வெளியானது.!

எக்ஸ்பிரஸ் யுகே என்ற செய்தி நிறுவனம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது அதிபர் மாளிகையில் உள்ள வீட்டில் தங்கி இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என செய்தி தெரிவித்துள்ளது.

Russian President Vladimir Putin (Photo Credit: Instagram)

அக்டோபர் 24, மாஸ்கோ (World News): ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), உக்ரைன் நாட்டில் போர் தொடுத்து சென்ற நிகழ்வுக்கு பின்னர், தற்போது வரை அவரது உடல் நலம் தொடர்பான பல்வேறு சர்ச்சை தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் யுகே என்ற செய்தி நிறுவனம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது அதிபர் மாளிகையில் உள்ள வீட்டில் தங்கி இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். 71 வயதாகும் அதிபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி சரிந்துள்ளார்.

அறைக்குள் இருந்த பொருட்களை கீழே தள்ளி பாதுகாவலர்களை எச்சரித்து, பின் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. World Oldest Dog Died: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்ற, உலகிலேயே மிகவும் வயதான நாய் மரணம்..! 

இது குறித்து அந்த செய்தி நிறுவனத்தின் அறிவிப்பில், பாதுகாப்பு படை அதிகாரிகள் அதிபர் விளாடிமிர் புதின் அவரது வீட்டு அறைக்குள், அவரால் எழுப்பப்பட்ட சந்தேக சத்தம் உடனடியாக அதிகாரிகளை எச்சரித்து இருக்கிறது.

அவர்கள் படுக்கையறைக்கு சென்ற பார்த்தபோது, அவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்ததாகவும், உணவு மற்றும் குளிர்பானங்கள் போன்றவை ஆங்காங்கே சிதறி கிடந்ததாகவும், மாரடைப்பை உறுதி செய்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.