Italy Train Crash: பயணிகள் இரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 17 பேர் படுகாயம்.. மீட்புப்பணிகள் தீவிரம்.!

கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியில் ஏற்படும் இரயில் விபத்துகள் தொடர்ச்சியாக மக்களை சோகத்திற்குள்ளாக்கி வருகிறது.

Italy Train Crash (Photo Credit: @AFP X)

டிசம்பர் 11, இத்தாலி (World News): இத்தாலி நாட்டில் உள்ள பயென்சா நகரம், போலோக்னா - ரிமினி இரயில் நிலையங்களுக்கு இடையே அதிவிரைவு இரயிலும், உள்ளூர் பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

நேருக்கு நேர் மோதி விபத்து: இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு இரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. இதனால் விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் தகவல்: விபத்து குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் மேட்டியோ ஷால்வானி, "அதிவிரைவு மற்றும் உள்ளூர் பயணிகள் இரயில்கள் மெதுவான வேகத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Cannabis Gang Atrocity: "சித்தப்பாவே செத்துட்டாரு, ஓசில சோறு கொடு": கஞ்சா போதையில் பேக்கரி, ஓட்டல், கறிக்கடையில் அடாவடி செய்த கும்பல்..! 

பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு: காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இரயில்கள் மிதமான வேகத்தில் சென்றதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது" என கூறினார்.

5 மாதங்களுக்கு முன் நடந்த சோகம்: இத்தாலியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக மிலன் - டூரின் ரயில் நிலையங்களுக்கிடையே, ஆகஸ்ட் 31ஆம் தேதி ஐந்து ரயில்வே ஊழியர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் நடந்திருந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் இரண்டு ரயிலில் ஒரே வழித்தடத்தில் பயணித்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

2018 விபத்து: கடந்த 2018ம் ஆண்டு மிலன் பகுதியில் இரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் 100 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு பெண்மணி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.