மதகுருவின் பேச்சைக்கேட்டு நடிகையின் அதிர்ச்சி செயல்.. விஷத்தவளையின் நீரை பருகி, துள்ளத்துடிக்க போராடி பறிபோன உயிர்.!
அமேசானில் இருந்து எடுக்கப்பட்ட விசத்தவளையின் நீரை, மதகுருவின் ஆலோசனைக்கு பின்னர் குடித்த நடிகை பரிதாபமாக உயிரிழந்தார்.
டிசம்பர் 07, மெக்சிகோ (World News): உலகளவில் மூடநம்பிக்கை என்பது பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. குருட்டுத்தனமாக ஒரு விஷயத்தை நம்பும் நபர்கள், அவர்கள் நம்பும் நபர்களின் பேச்சைக்கேட்டு விஷத்தை கூட அருந்தும் நிலைக்கு கூட தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, மெக்சிகோ நாட்டில் நடிகை ஒருவர் மதகுருவின் பேச்சைக்கேட்டு செயல்பட்ட நிலையில், அவரின் உடலில் விஷம் மேலேறி துள்ளத்துடிக்க உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. World Soil Day 2024: உலக மண் தினம்.. மண் வளத்தை மேம்படுத்துவது எப்படி? விவரம் உள்ளே..!
விஷத்தன்மை கொண்ட நீர்:
மெக்சிகோ நாட்டில் வசித்து வரும் நடிகை முர்ஸலா அல்கஸர் ரோட்ரிகுயஸ் (Marcela Alcázar Rodríguez). 33 வயதாகும் நடிகை முர்சலா, மாதவழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர் கொண்டவர் என கூறப்படுகிறது. அங்குள்ள மதகுருவிடம் அவர் போதனைகளும் பெற்று வந்துள்ளார். இதனிடையே, தென்னமெரிக்காவின் கம்போ முறைப்படி, அவர்கள் அங்குள்ள தவளை ஒன்றின் நீரை விஷத்தன்மை கொண்ட நீரை பருங்கியதாக கூறப்படுகிறது.
உடல்நலக்குறைவால் உயிரிழப்பு:
இதனால் நடிகையின் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு, அவர் கடுமையான வயிற்றுப்போக்கு (Diarrhoea) காரணமாக அவதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பாரம்பரிய முறைப்படி என லிட்டர் அளவிலான விஷத்தை, மொத்தமாக அவர் பலமுறை பருகியதாகவும் தெரியவருகிற்து. இதனால் அவரின் உடலில் ஆங்காங்கே திடீர் வீக்கம் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகி உயிர் பிரிந்துள்ளது. உதடுகள் மற்றும் முகம் ஆகியவையும் வீங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட அரைமணிநேரம் முதல் ஒருமணிநேரத்திற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பான விசாரணையை தற்போது காவல்துறையினர் முன்னெடுத்துள்ள நிலையில், அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.