டிசம்பர் 05, டெல்லி (Special Day): செடிகள் அனைத்து சத்துகளுடன் வளர்வதற்கு தேவையான காரணிகளில் முக்கியமானது நல்ல வளமான மண். மண்ணின் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு அறிவிப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மண் தினம் (World Soil Day) கொண்டாடப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டு முன்னாள் அதிபர் பூமிபால் தஜேவின் பிறந்த நாளான டிசம்பர் 5ம் தேதி சர்வதேச மண் தினமாக போற்றப்படுகிறது.
மண்வளம்: மண் விவசாயம் செய்யாமலோ, ரசாயனம் பயன்படுத்தியோ அல்லது ஒரே பயிரை விளைவிப்பதாலோ மண் வளம் (Soil Fertility) குறைய ஆரம்பிக்கும். அதாவது மண்ணில் உள்ள சத்துக்கள் அழிந்து களர்நிலமாக மாறிவிடும். இதனால், மண்ணில் சத்துக்கள் குறைந்தால் நீர் பிடிப்புத் திறன் குறைந்து விடும். ஒரே இடத்தில் நீர் தேங்கத் தொடங்கும். இதனால் உப்புத் தன்மை அதிகரிக்கும். இவைகளை சரிசெய்ய ரசாயனம் இட வேண்டும். இவைகள் மேலும் உப்புத் தன்மையை அதிகரித்து நஞ்சாகக் கூடும். Navy Day 2024: இந்திய கடற்படை தினம்.. நாட்டைக் காக்கும் வேட்டைக்காரனின் வரலாறு என்ன தெரியுமா?!
மண் வளம் அவசியம்: சில நிலங்களில் வடிகால் வசதி இல்லாத நிலங்களும் அதன் சத்துக்களை இழக்க நேரிடும். மண்ணால் உறிஞ்சப்படாத தண்ணீர் உப்புத் தன்மையை அதிகப்படுத்துவதுடன் நிலத்தை கெட்டியாக மாற்றி விடும். இவ்வாறு ஆன நிலத்தை சரி செய்ய, அங்கு மரங்களை வளர்த்தால் நிலத்தின் தன்மை வளமானதாக மாறும். மேல் மண் அடித்து செல்லாதவாறு வாடிகால் வசதி அமைக்க வேண்டும். நிலத்தில் உள்ள வளமான மேல் மண்உருவாக பல ஆண்டுகள் ஆகலாம்.
மண்ணில் தாவரக் கழிவுகள் சேர்க்கப்படும் போது மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து சத்துகளும் அதிகரிக்கும். நுண்ணுயிரிகள் இருப்பதால் கெட்டுயான மண்கள் பயிர் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றும். எந்த வகை மண்ணாக இருந்தாலும் அதை வளப்படுத்த தாவர கழிவுகளை சேர்க்க வேண்டும்.