Mexico Shocker: கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரி துப்பாக்கிசூடு; 7 ஆண்கள், 3 பெண்கள் பரிதாப பலி., 7 பேர் படுகாயம்.!

பாரில் வாடிக்கையாளர்கள் இருந்தபோது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிசூட்டில், 10 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Mexico Bar Gun Fire (Photo Credit: @arnoticiasmx X)

நவம்பர் 10, க்யூரட்டாரோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள க்யூராட்டாரோ (Querétaro) நகரம், அந்நாட்டின் தலைநகரில் இருந்து 110 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு லாஸ் கண்டாரியஸ் (Los Cantaritos bar) பார் செயல்பட்டு வருகிறது. இன்று இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 09:30 மணியளவில், சுமார் 10 க்கும் மேற்பட்டோர் பாரில் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தனர். சிலர் பாரின் வெளியே சாலையோரம் நின்றுகொண்டு இருந்தனர். 

சரமாரி துப்பாக்கிசூடு:

அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல், காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கி பாரில் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் பாரில் இருந்த 10 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 7 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் 7 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிசூடு எதற்காக நடத்தப்பட்டது? என விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, துப்பாக்கிசூடு நடத்திய கும்பலின் தாக்குதல் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த காணொளி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியவை ஆகும்.

மர்ம கும்பல் காரில் வந்து பப்பில் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவத்தின் பதறவைக்கும் காணொளி:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif