Balochistan Bomb Blast on 09-Nov-2024 (Photo Credit: @AdityaRajKaul X)

நவம்பர் 09, பலோசிஸ்தான் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலோசிஸ்தான் (Balochistan Bomb Blast) மாகாணம், பெஷாவர் இரயில் நிலையத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. பெஷாவ்ரில் உள்ள குயெட்டா (Quetta Railway Station) இரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தது நடந்துள்ளது. Train Derailed: பயணிகள் விரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; நல்வாய்ப்பாக காத்திருந்த அதிஷ்டம்.! 

மீட்பு பணிகள் தீவிரம்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு சூழ்நிலை உண்டாகி இருக்கிறது.

தற்கொலைப்படை தாக்குதல் எனத் தகவல்:

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்துள்ள பலோசிஸ்தான் இராணுவம் (Baloch Liberation Army) இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. பாக்கிஸ்தான் இராணுவத்தை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

குண்டு வெடிப்புக்கு பின் இரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள்: