Truck Crash With Flight: விமானத்துடன் மோதிய கனரக லாரி; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..! விபரம் உள்ளே.!

பக்கவாதம் காரணமாக ஓட்டுநர் பாதிக்கப்பட்டு விமானத்தின் கீழ் புறத்தில் மோதிய காரணத்தால், துபாய்க்கு புறப்பட்ட விமானம் பணிமனைக்கு திரும்ப வேண்டிய சூழல் உண்டாகியது.

Moscow Airbus 380 Truck Crash (Photo Credit: @TheInsidePaper X)

மார்ச் 28, மாஸ்கோ (World News): ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ டோமொடலோ விமான நிலையத்தில், நேற்று எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இகே 134 விமானம் துபாய் நோக்கி புறப்பட நின்று கொண்டிருந்தது. அச்சமயம் ஏர்பஸ் ஏ380-க்கு கீழே கனரக வாகனம் ஒன்று சென்றது. அச்சமயம், எதிர்பாராத விதமாக கனரக வாகனத்தின் மேற்கூரை விமானத்துடன் நேரடியாக மோதியது.

ஓட்டுனருக்கு பக்கவாதத்தால் நடந்த சோகம்: இதனால் விமானம் லேசாக சேதம் அடைந்த நிலையில், உடனடியாக அது பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அதில் அழைத்து செல்லப்பட காத்திருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமான மூலமாக அங்கிருந்து துபாய் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணையில், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய ஓட்டுனர், பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. SRH Vs MI Highlights: மரண மாஸாக அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா.. இமாலய இலக்கு சேர்த்து, புதிய சரித்திர சாதனையுடன் வெற்றிகண்ட ஹைதராபாத் அணி.! 

இதனையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துபாயிலிருந்து மாஸ்கோவுக்கு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம், உள்ளூர் நேரப்படி மதியம் 02:30 க்கு மாஸ்கோவுக்கு வருகை தரும். பின் 5 மணி நேர இடைவெளிக்கு பின் மாலை 07:30 மணியளவில் மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டு செல்லும். நேற்று மாலை 04:15 மணியளவில் கனரக பொருட்கள் ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்த வேளையில், இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.