Nigeria Civilians Killed: தாயின் முதுகில் கதறும் குழந்தையின் அழுகுரல்; கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட 160 பேர்.. நைஜீரியாவில் நடந்த பயங்கரம்.!
நைஜீரிய இராணுவம் தங்களால் இயன்ற பாதுகாப்பை மக்களுக்கு வழங்கினாலும், மக்களை குறிவைத்து தொடர்ந்து நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் அதிர்வலைகளை பதிவு செய்கின்றன.
டிசம்பர் 26, லாகோஸ் (World News): நைஜீரியாவில் தலைதூக்கி இருக்கும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம், உள்நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல் சார்ந்த சூழ்நிலைகள் காரணமாக, அங்குள்ள மக்கள் கடுமையான வாழ்நாள் போராட்டங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர். இதனால் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு: அங்கு எஞ்சியிருக்கும் மக்களை, அவ்வப்போது நைஜீரியாவில் (Nigeria Terror Attack) செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்து கொன்று குவிப்பது தொடர்கதையாகி வருகிறது. அரசு சார்பில் நைஜீரிய பயங்கரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைள் எடுத்தாலும், அவை ஒருசில நேரம் எவ்வித பலனையும் தந்து மக்களை காப்பாற்றுவது இல்லை. Tirunelveli Thiruchendur Track Repair Work: திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் போக்குவரத்தை விரைந்து தொடங்க ஏற்பாடு; தீவிரமாக பணியாற்றும் இரயில்வே அதிகாரிகள்.!
கிராமத்திற்குள் புகுந்து கொடூர தாக்குதல்: இந்நிலையில், மத்திய நைஜீரியாவில் இருக்கும் பிளாடேயு (Plateau) மாகாணத்தில் உள்ள போக்கோஸ் கிராமத்தில் நடந்த பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் சிக்கி 160 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிக்கி அனைவரும் உயிரிழந்துள்ளனர். குழந்தையை தங்களின் முதுகில் வைத்தவாறு பெண், ஆண் உயிரிழந்து கிடைக்கும் கண்கலங்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.