Plane Catches Fire: எஞ்சினில் பற்றி எரிந்து தீக்கிரையான விமானம்.. 95 பயணிகளின் நிலைமை? துருக்கியில் பதறவைக்கும் சம்பவம்.!
நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை.
நவம்பர் 25, அங்காரா (World News): தெற்கு துருக்கியில் உள்ள அந்தாலையா (Antalaya Airport) விமான நிலையத்தில், ரஷ்யாவில் உள்ள சோசி (Sochi) நகரில் இருந்து வந்த விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது. 89 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என 95 பேருடன் துருக்கி நோக்கி வந்த விமானம், தனது இலக்கை அடையும் தருவாயில் எஞ்சினில் தீப்பற்றி விபத்தில் சிக்கியது. Indian Student Dies In US: பிறந்தநாளில் நேர்ந்த சோகம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி..!
தீப்பிடித்து விபத்து:
ரஷ்ய நிறுவன தயாரிப்பான சுகோய் சூப்பர்ஜெட் 100 (Sukhoi Superjet 100 A45051) விமானம், துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சியின்போது, முதல் எஞ்சினில் திடீரென கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. உள்ளூர் நேரப்படி அந்தாலையா விமான நிலையத்தில், அதிகாலை 03:00 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு:
தரையிறங்கும் நடவடிக்கையின்போது எஞ்சினில் தீப்பற்றிய காரணத்தால், உடனடியாக விமானம் சில நொடிகளில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 5 நிமிடம் முன்னதாக விமானம் தீப்பற்றி இருந்தால், மிகப்பெரிய சோகத்திற்கு வழிவகை செய்திருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விமானம் தீப்பிடித்து எரிந்த பரபரப்பு காட்சிகள்: