Indian Student Dies In US (Photo Credit: @pakistan_i57752 X)

நவம்பர் 23, கன்சாஸ் (World News): தெலுங்கானா மாநிலம், புவனகிரி (Bhuvanagiri) மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்யன் ரெட்டி (வயது 23). இவர், அமெரிக்காவின் அட்லான்டா பகுதியில் உள்ள கன்சாஸ் (Kansas)மாகாண பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆர்யன் ஜார்ஜியா பகுதியில், தான் தங்கியிருந்த வீட்டில் நண்பர்களுடன் தன் பிறந்த நாளை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி கொண்டாடினார். World War 3: "மூன்றாம் உலகப் போர் தொடங்கியது" உக்ரைனின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜலுஸ்னி..!

இந்நிலையில், அவரது நண்பர்கள் ஒரு அறையில் இருந்தனர். மற்றொரு அறையில் இருந்த துப்பாக்கியை (Gun) ஆர்யன் கையில் எடுத்து துடைத்துள்ளார். அப்போது, திடீரென துப்பாக்கி வெடித்ததில், அதிலிருந்து சீறிய குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்தது. இதில், ஆர்யன் படுகாயமடைந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு, அறைக்கு விரைந்து வந்த நண்பர்கள், ஆர்யன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, ஆர்யன் சொந்த ஊரான தெலுங்கானாவுக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.