Councilor Meeting Grenades Blast: கவுன்சிலர்கள் கூட்டத்தில் குண்டுவீசி தாக்குதல்: ஒருவர் பலி., 26 பேர் படுகாயம்.. நேரலையில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!

2024ம் ஆண்டில் செய்யவேண்டிய நலத்திட்டங்கள், கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்த கவுன்சிலர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் உக்ரைனில் நடந்துள்ளது.

Councilor Meeting Grenades Attack (Photo Credit: @31khan_honey X)

டிசம்பர் 16, உக்ரைன் (World News): உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த ரஷியா - உக்ரைன் போர் (Russia Ukraine War) இரண்டாவது ஆண்டை நெருங்குகிறது. உக்ரைன் தன்னிடம் சரணாகதியாகும் வரை தாக்குதல் தொடரும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெளிவாக கூறிவிட்டார். தன்னை எப்படியாவது நேட்டோவில் இணைத்து, ரஷியாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற முயற்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் நேட்டோ நாடுகளின் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

தற்காப்புக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்: ஒருபுறம் ரஷிய இராணுவங்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உக்ரைன் இருந்தாலும், மற்றொருபுறம் மக்களுக்கு தேவையான பணிகளை அரசு நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. பாதுகாப்பு கருதி மக்கள் தங்களின் உயிரை எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள ஆயுதங்கள் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி முதல் கையெறி குண்டுகள் வரை பாதுகாப்புக்காக அரசு நிர்வாகம் தயார் நிலையிலேயே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கவுன்சிலர்கள் கூட்டம்: இந்நிலையில், உக்ரைனில் உள்ள மேற்கு ட்ரான்ஸ்கார்பதியென் (Western Transcarpathian) மாகாணம், கிரீட்ஸ்கை (Keretsky) நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தில் பகுதி வாரியான மக்கள் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு முகநூல் பக்கத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு, இதுவரை நடைபெற்ற நலப்பணிகள் மற்றும் மேற்படி செய்ய வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இருந்தது. Samsung Smartphone Hacking: சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: தப்பிப்பது எப்படி??.. எச்சரிக்கையுடன் அறிவுறுத்திய மத்திய அரசு.! 

கையெறி குண்டுவீசி தாக்குதல்: கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கடந்த சூழலில், கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வந்த நபர் ஒருவர் திடீரென கையெறி (Councilor Meeting) குண்டுகளை தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து அறை முழுவதும் வீசினார். இந்த சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகிவிட, குண்டு வீசியவர் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த காட்சிகள் நேரலையில் பார்த்தவர்களை பதறவைத்துள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு சத்தம் கேட்டு காவல் துறையினரும் களமிறங்கினர்.

காரணம் என்ன?: உடனடியாக படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள். குண்டு வீசியவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கும் - போருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விபரங்கள் இல்லை. ஹங்கேரி நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள 4 ஆயிரம் பேர் வசிக்கும் நகரமே கிரீட்ஸ்கை என்பது குறிப்பிடத்தக்கது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now