US Indian Student Died: அமெரிக்காவில் அடுத்தடுத்த அதிர்ச்சி.. இந்திய மாணவர் மர்ம மரணம்..!

எதிர்பாராமல் நடக்கும் மரணங்களின் காரணம் மர்மமாக இருப்பதால் சந்தேகம் வலுக்கிறது.

US Cops | Death File Pic (Photo Credit: Wikipedia / Pixabay)

பிப்ரவரி 02, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் இந்தியாவிலிருந்து மேற்படிப்புக்காக செல்லும் உயர்கல்வி மாணவர்கள், அங்கிருந்தபடி பகுதி நேரத்தில் பணியாற்றி தங்களது படிப்பையும் கவனித்து வருகின்றனர். இவர்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்திய அரசின் ஒத்துழைப்புடன் அமெரிக்க அரசு வழங்கி வருகிறது.

சுத்தியலால் அடித்தே கொலை: அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மர்ம மரணம் அடைந்து வருகின்றனர். இது விடைதெரியாத மர்மத்திற்கு வழிவகை செய்துள்ளது. அங்குள்ள பிற மாணவர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி ஜியார்ஜியா மாகாணத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இந்திய மாணவர் விவேக் ஷைனி, உள்ளூர் நபரால் சுத்தியலால் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை அடித்து கொலை செய்யப்பட்டார். Shocking Video: பேருந்தின் படிக்கட்டில் தவறிவிழுந்த பெண்மணி; நடத்துனரின் செயலால் மறுபிறவி.. குவியும் பார்ட்டிகள்.! 

நீல் ஆச்சார்யாவின் மர்ம மரணம்: அந்த தாக்கம் முடிவடைவதற்குள் இந்தியானா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சாரியா, அவரது கல்லூரி வளாகத்தில் இருந்து மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அடுத்த மரணம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஓஹியோ (Ohio) மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி பகுதியில், இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி மரணங்கள்: அவர் ஸ்ரேயாஸ் ரெட்டி என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் அவரின் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மர்ம மரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.