Texas Tornado: டெக்ஸஸ் மாகாணத்தை பஞ்சராக்கிய சூறாவளி; 4 பேர் பலி.!

உலகிலேயே பல ஆபத்தான சூறாவளிகளால் அவதிப்படும் அமெரிக்காவில், டெக்ஸாஸ் மாகாணத்தில் தற்போது சூறாவளி தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

Texas Tornado (Photo Credit: @NickABC13 X)

மே 17, டெக்ஸாஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில், தற்போது கடுமையான சூறாவளி தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சூறைக்காற்றுடன் கொண்ட மழையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் பிய்த்து எறியப்பட்டன. கண்ணாடிகளால் அமைக்கப்பட்ட கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கடும் சேதமும் அடைந்துள்ளன. Air India Flight Collision: டிராக்டருடன் மோதிய ஏர் இந்திய விமானம்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 180 பயணிகள்.! 

ஆபத்தான சூறாவளியை எதிர்கொள்ளும் நாடு: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவை பலவகையான சூறாவளி புயல்கள் எதிர்கொள்கின்றன. அங்கு இயற்கையின் விளைவாக கவனிக்கப்படும் சூறாவளி புயல்கள் ஏற்படுத்தும் சேதம் தொடர்ந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கையாகவே தகவல் தெரிவிக்கப்படும் என்பதால், மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து, பின் சூறாவளி கடந்ததும் வீட்டிற்கு திரும்புவார்கள்.

டெக்ஸாஸில் 4 பேர் பலி: இந்நிலையில், நேற்று ஒருநாளில் டெக்ஸஸ் மாகாணத்தை தாக்கிய சூறாவளி புயலின் காரணமாக 4 பேர் உயிரிழந்து இருக்கின்றனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த தகவல் அம்மாகாண மேயரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இடி-மின்னலுடன் சூறாவளி கடந்துசெல்லும்போது, கட்டிடங்களின் ஜன்னல் பெயர்ந்து விழுந்த காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.