Gautam Adani: அதானிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து வந்த ஆப்பு.. ரூ.2,100 கோடி இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம்.. பேரதிர்ச்சி.!

நியூயார்க் மாகாண நீதிமன்றத்தில், கெளதம் அதானிக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் மற்றும் இலஞ்சம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

Newyork Federal Court Accuses Gautam Adani (Photo Credit: @LiveLawIndia / Wikipedia Commons)

நவம்பர் 21, நியூயார்க் (World News): உலகளவில் மிகப்பெரிய தொழிலதிபர் கெளதம் அதானி (Gautam Adani). அதானி குழுமம் (Adani Groups) இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை வழங்கி தொழில் செய்து வரும் நிலையில், சமீபத்தில் செபி (SEBI) பங்குச்சந்தை விவகாரத்தில் சிக்கி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில், இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், கெளதம் அதானி (Adani News) மற்றும் 7 மூத்த நிர்வாகிகள் மீது அமெரிக்க நீதித்துறை சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. College Girl Gang Rape: காதலனை நம்பி ஏமாந்த மாணவி.. கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்.., 4 பேர் அதிரடி கைது..!

இலஞ்சம் கொடுத்தது உறுதி:

அதாவது, ரூ.16,000 கோடி இலாபம் பெரும் வகையிலான சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தினை பெற, அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு மொத்தமாக ரூ.2,100 கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்ற கெளதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் உட்பட 7 பேரை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்து இருக்கிறது என கூறப்படுகிறது.

அன்றே கணித்த ஹிண்டன்பர்க்:

கடந்த 2020 - 2024 வரை சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க அதானி தனிப்பட்ட முறையில் சந்திப்புகள் நடத்தியதாகவும் பகீர் குற்றச்சாட்டு முன்வைப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசித்து வருகிறார்கள். கடந்த 2023ல் அதானியின் செயல்களை ஹிண்டன்பர்க் (Hindenburg Research) அறிக்கை ஊழல்களில் மிகப்பெரியது என கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதானியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள்:

கெளதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து வந்த உத்தரவு: