PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!
3 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் ஜி7 பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார்.
மே 21, நியூ கினியா (Papua New Guinea): ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு ஜப்பான் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகருக்கு சென்றிருந்தார். அங்கு அமெரிக்கா, ஜப்பான் உட்பட ஜி7 நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அவர் உரையாற்றினார்.
பல நாட்டு தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வரவேற்று தங்களின் நட்புறவை மேம்படுத்த வழிவகை செய்தனர். இந்த பயணத்தின் முடிவை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கு கூடுதலாக அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சிலமணித்துளிகளுக்கு முன்பு பப்புவா நியூ கினி (Papua New Guinea) நாட்டிற்கு அவர் சென்றார். G7 Summit PM Narendra Modi: கருநிற மேகங்களுக்கு மத்தியில் பளிச்சிடும் மின்னலாய் பிரதமர் நரேந்திர மோடி; உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கு நடவடிக்கை..!
அங்கு அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், மரியாதை மற்றும் நல்லன்பின் அடிப்படையில் பிரதமரின் கால்களை தொழுது ஆசி வாங்கினார். பிரதமர் நரேந்திர மோடியும் ஜேம்ஸக்கு ஆசி வழங்கினார். அதனைத்தொடர்ந்து, நாட்டின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசுத்துறை அதிகாரிகளை பிரதமர் மோடிக்கு ஜேம்ஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
பிரதமருக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு: