Iran President Meets India's EAM: ஈரான் அதிபர் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு; சபாஹர் துறைமுக விரிவாக்கத்தில் இந்தியா ஒப்பந்தம்.!

ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரடைய இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும், பாலஸ்தீனிய மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என ஈரான் அதிபர் இந்தியாவிடம் வேண்டுகோள் வைத்தார்.

Iran President Seyyed Ebrahim Raisi Meet with Indian EAM JaiShankar (Photo Credit: @Iran_In_India X)

ஜனவரி 16, டெஹ்ரான் (World News): ஈரான் நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (Indian Foreign Minister Jaishankar), இன்று ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியை (Seyyed Ebrahim Raisi) நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு அரசுகளின் ராஜாங்க உறவுகளை மேம்படுத்தவும், எதிர்கால இந்தியா-ஈரான் நட்பில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அரசுத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், "இந்தியா - ஈரான் நட்புறவின் உடன்படிக்கைபடி, ஈரானில் ஸபாஹர் துறைமுக (Chabahar Port) திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுவதன் வாயிலாக, நட்புறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது.

இந்தியாவின் ஒத்துழைப்பை நல்கும் ஈரான்: ஈரான்-இந்தியா இடையேயான ஆழமான உறவுகளை மேலும் மேம்படுத்த, அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைக்கவும் வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான பொதுவான பார்வை, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிலைநாட்டுதல் விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பையும் ஈரான் நாடுகிறது. சர்வதேச கடல் போக்குவரத்தில் பாதுகாப்பை வழங்குதல், வர்த்தகத்தை மேம்படுத்துதல் வேண்டும். Panipuri Vendor Killed: இலவசமாக வழங்க மறுத்ததால் ஆத்திரம்; பானிபூரி விற்பனையாளர் அடித்தே கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.! 

காசா விவகாரத்தில் ஈரான் பாலஸ்தீனியத்தின் பக்கம்: அதேபோல, காசா மீதுள்ள தாக்குதல்களை நிறுத்தவும், காசாவில் நடைபெற்ற போர்க்குற்றம் மனிதகுலத்திற்கு எதிரானவை என்பதில் ஈரான் தெளிவாக இருக்கிறது. காசா மீதுள்ள தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்" என ஈரானிய அதிபரின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.